வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (15:36 IST)

பா ரஞ்சித் படத்தில் இருந்து விலகிய அமீர்… இப்போ இவர்தான் ஹீரோவாம்!

பா ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன் பரியேறும் பெருமாளுக்குப் பிறகு இரண்டாவது படமாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு தயாரித்தது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். அதியன் ஆதிரை இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்த நிலையில் மீண்டும் அதியன் ஆதிரை நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக படம் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக இயக்குனர் அமீர் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் இப்போது அந்த படத்தில் இருந்து அமீர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அமீருக்குப் பதிலாக அட்டகத்தி தினேஷ் அந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.