டிசம்பர் 9 வெளியாகும் தெலுங்கு தனி ஒருவன்
ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களும் ஒரேயொரு படத்துக்காக காத்திருக்கின்றன. அது, தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான, துருவா.
ஜெயம் ரவி நடித்த வேடத்தில் ராம் சரண் தேஜா நடிக்க அரவிந்த்சாமி அதே வில்லன் வேடத்தை தெலுங்கிலும் ஏற்றுள்ளார். படத்துக்கு துருவா என்று பெயர் வைத்துள்ளனர்.
சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 9 திரைக்கு வருகிறது. படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதால் 100 கோடிகளை எளிதாக தாண்டும் என கணித்துள்ளனர்.