வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (20:55 IST)

தனுஷுக்கு வில்லனாகும் செல்வராகவன்...? D50 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
 
இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படம் முடிந்துள்ளதை அடுத்து இந்த படத்தை தனுஷ் உடனடியாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிக்கவுள்ளாராம். அதுவும் இப்படத்தில் தனுஷிக்கு வில்லனாக நடிக்கப்போவதாக சமீபத்திய தகவல் கூறுகிறது. அப்படி மட்டும் இருந்துவிட்டால் இப்படம் வேற மாதிரி ஹிட் கொடுக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.