1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:21 IST)

ஆளுக்கு 50 ஆயிரம்… 125 விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யும் தனுஷ்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் தனுஷ்.


 

 
விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார் நடிகர் சங்க செயலாளர் விஷால். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில், விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் விஜய். இவர்கள் செய்ததைவிட, மிகப்பெரிய உதவியை செய்யப் போகிறார் தனுஷ்.
 
வறட்சியால் பலியான 125 குடும்பங்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி செய்யப் போகிறார். தேனி அருகிலுள்ள சங்கராபுரம் என்ற ஊரில் இந்த நிகழ்வு இன்று நடக்க இருக்கிறது. அங்குதான் தனுஷின் குலதெய்வக் கோயில் இருக்கிறது.
 
125 விவசாயக் குடும்பங்களையும் சொந்த செலவில் அங்கு அழைத்துவந்து தங்க வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வரை மொத்த செலவும் தனுஷ் தானாம். இதற்காக மொத்தம் 80 லட்ச ரூபாய் செலவு செய்கிறார் தனுஷ். இந்தப் பணிகளை, இயக்குநர் சுப்ரமணிய சிவா முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார்.