நினைத்ததை சாதித்த தனுஷ்? காலாவில் இளம்வயது ரஜினியா?
காலா படத்தில் இளம் வயது ரஜினியாக தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார். தனுஷ் இந்த படத்தில் இளம் வயது ரஜினியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி வயதான டானாக நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் இளம் வயது ரஜினியாக தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தனுஷ் முதலில் ரஞ்சித்திடம் தனக்கு கௌரவ தோற்றம் தருமாறு கேட்டார். ஆனால் ரஞ்சித் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். தற்போது தனுஷ் இளம் வயது ரஜினியாக நடிக்க போகும் செய்தி வைரலாக பரவி வருகிறது.