புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (09:39 IST)

மர்ம கொலைகளை செய்யும் கோர்ட்லேண்ட்; தனுஷ் கேரக்டர் என்ன? – தி க்ரே மேன்!

நடிகர் தனுஷ் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த படத்தின் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகரான தனுஷ் தமிழை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்ததோடு அல்லாமல், ஹாலிவுட்டிலும் பிரபலமாகி வருகிறார். முன்னதாக ஹாலிவுட்டில் அவர் நடித்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் பிரபல அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் ரஸோ பிரதர்ஸ் இயக்கும் புதிய ஹாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி க்ரே மேன் என்ற பெயரில் ரஸோ பிரதர்ஸ் இயக்கும் இந்த படத்தின் கதை ‘தி க்ரே மேன்’ என்ற பெயரில் மார்க் க்ரெனே எழுதிய நாவலை மையப்படுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கூலிக்கு கொலை செய்யும் சுதந்திரமான மர்ம கொலைகாரனான கோர்ட்லேண்ட் ஜெண்ட்ரி என்ற கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட கதை அது. இந்த த்ரில்லர் கதையில் தனுஷ் கதாப்பாத்திரம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. எனினும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் படத்தில் தனுஷ் நடிப்பது பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.