வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (18:19 IST)

மீண்டும் இணையும் தனுஷ்-ஜிவி பிரகாஷ்: இம்முறை சர்வதேச லெவல்

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்பட ஒருசில படங்களுக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்ற நிலையில் தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ்-தனுஷ்
மீண்டும் இணையும் தனுஷ்-ஜிவி பிரகாஷ்
இணைந்துள்ளனர். ஆனால் இம்முறை சர்வதேச அளவில் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜிவி பிரகாஷின் சர்வதேச அளவிலான ஆங்கில ஆல்பம் ஒன்று தயாராகி வருகிறது என்றும் கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா அவர்களுடன் இணைந்து ஜிவி பிரகாஷ் இந்த ஆல்பத்தை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கோல்ட் நைட்ஸ்’ என்று தொடங்கும் இந்த ஆல்பம் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஜிவி பிரகாஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த சிங்கிள் பாடலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆங்கில ஆல்பத்தை தனுஷ் வெளியிடுவது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த ஆல்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது