வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 மே 2024 (09:19 IST)

இந்தியன் 2 ரிலீஸ் தேதியில் மாற்றம்… சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் தனுஷின் ராயன்!

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது ஜூன் நான்காவது வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால் இந்தியன் 2 ரிலீஸாக இருந்த ஜூன் 13 ஆம் தேதியில் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.