1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (19:43 IST)

செல்வராகவன்தான் இயக்குனர் என சொன்ன தனுஷ்… அலறி ஓடும் தயாரிப்பாளர்!

நடிகர் தனுஷ் தான் நடிக்கும் படத்தின் இயக்குனராக செல்வராகவனை சொன்னதும் அதன் தயாரிப்பாளர் வேண்டாம் என சொல்லியுள்ளாராம்.

நடிகர் தனுஷ்தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமான படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகர். வரிசையாக படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் தனுஷ் தனது முன்னாள் மேனேஜர் வினோத் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

வினோத்தான் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தைக் கவனித்து வந்தார். அதில் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் இப்போது இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு நீங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு கதையை தனுஷே எழுதியுள்ளதாகவும் செல்வராகவன் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என தனுஷ் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் தனுஷின் இந்த விருப்பத்துக்கு படத்தின் தயாரிப்பாளர் முட்டுக்கட்டையாக உள்ளாராம். ஏனென்றால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் செல்வராகவன் இயக்கினால் தனக்கு லாபம் கிடைக்காது எனக் கூறியுள்ளாரம். சமீபகாலமாக செல்வராகவன் இயக்கும் படங்கள் எல்லாம் தோல்வி அடைந்து வருவதால் தயாரிப்பாளர் அவரை நம்பி மிகப்பெரிய பட்ஜெட்டை முதலீடு செய்ய யோசிக்கிறாராம்.