1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 28 ஏப்ரல் 2014 (10:45 IST)

தனுஷுக்கு இந்திய சர்வதேச திரைப்பட விருது

இந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (IIFA) என்ற பெயரில் வருடா வருடம் இந்திப் படங்களுக்கு மட்டும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வருடம் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என அனைத்துப் பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன. தனுஷுக்கும் ஒரு விருது கிடைத்தது.
 
சென்ற வருடம் தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனா வெளியாகி ஆரவாரமாக ஓடியது. அந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும், ராஞ்சனா படத்துக்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை தனுஷ் தட்டிச் சென்றார்.
 
மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், ரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் இந்த இடத்துக்கு தன்னால் வரமுடிந்திருக்காது எனவும் தனுஷ் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் கூறியுள்ளார்.