1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (17:53 IST)

ரஜினியுடன் மோத பயந்த தனுஷ்

ரஜினியுடன் மோதுவதற்குப் பயந்து, வில்லன் கேரக்டரை வில்லியாக மாற்றிவிட்டாராம் தனுஷ்.


 


செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ், அமலா பால், கஜோல் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். மும்பையில், இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது முடிந்தது. இந்தப் படத்தில் தனுஷுக்கு முக்கிய எதிரியாக வரும் கதாபாத்திரத்துக்கு, முதலில் தன்னுடைய அப்பாவான ரஜினிகாந்தை மனதில் வைத்து கதை எழுதியதாகக் கூறியுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

ஆனால், மாமனார் மற்றும் மருமகன் இருவரை நேர் எதிரே நடிக்க வைக்கும் திட்டம், பல காரணங்களால் கைவிடப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் தனுஷ் ஆகியோருக்கு இடையே பெரிய பிளவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவியதால், ‘விஐபி 2’வில் ரஜினி கதாபாத்திரத்தின் கதையை மாற்றி எழுதி, அப்பாத்திரத்தில் கஜோலை நடிக்க வைத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன