1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2017 (12:48 IST)

விஐபி-2 படத்தில் அனிருத் இல்லாதது ஏன்? தனுஷ் விளக்கம்

சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் அனிருத் இல்லாதது குறித்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
வேலையில்லா பட்டதாரி-2 தனுஷ் பிறந்தநாளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் தனுஷ், கஜோல், சமுத்திரக்கனி, சௌந்தர்யா, சீன் ரோல்டன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
 
இதில் அனிருத் இரண்டாம் பாகத்தில் இல்லாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தனுஷ் கூறியதாவது:-
 
முதல் பாகத்தில் ஒரு இளைஞனுக்கு தேவையான துடிப்பு, உறுதி வேண்டும். எனவே அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் இரண்டாவது பாகத்திற்கு பொறுமையும், வாழ்க்கைக்கு உண்டான தத்துவத்தை உணர்ந்த ஒரு இசையமைப்பாளர் வேண்டும் என்பதால் சீன் ரோல்டனை அணுகினோம் என்றார்.