ஒரு வழியாக மனம் மாறிய தனுஷ்… ஜகமே தந்திரம் படத்துக்கு ப்ரமோஷன்!
ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர் முடிவெடுத்ததால் அதிருப்தியில் இருந்தார் நடிகர் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் பணிகள் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யமுடியாத சூழல் உருவானது. அதனால் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்தார் தயாரிப்பாளர் சஷிகாந்த். ஆனால் இந்த முடிவு தனுஷுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தனுஷ் தயாரிப்பாளர் மேல் கோபமாக இருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் படத்தின் டீசர் வெளியான போது கூட அதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஷேர் செய்யவில்லை.
ஆனால் இப்போது டிரைலரை தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனால் கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.