‘விவேகம்’ டிரெய்லரைப் பாராட்டிய தனுஷ்
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விவேகம்’ டிரெய்லரைப் பாராட்டியுள்ளார் தனுஷ்.
சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். ‘வேதாளம்’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார் அனிருத்.
வருகிற வியாழக்கிழமை ரிலீஸாக இருக்கிற இந்தப் படத்தின் டிரெய்லர், நேற்று 12.01 மணிக்கு ரிலீஸானது. செம மாஸாக இருக்கிறது என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த டீஸரை, தனுஷும் பாராட்டியிருக்கிறார். “அற்புதமாக இருக்கிறது டிரெய்லர். அஜித் சாரின் நடிப்பு பிரம்மிக்கத்தக்க வகையில் இருக்கிறது. காத்திருக்க முடியவில்லை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தனுஷ்.