வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (16:01 IST)

தயாரிப்பாளர் மீது கோபத்தில் இருக்கும் தனுஷ்?

சென்சாருக்கு படத்தை சரியான நேரத்தில் அனுப்பாததால், தயாரிப்பாளர் மீது கோபத்தில் இருக்கிறாராம் தனுஷ்.


 

 
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் – அமலா பால் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, கலைப்புலி எஸ்.தாணுவும் இந்தப் படத்தைத் தயாரித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது.


ஆனால், தயாரிப்பாளரான எஸ்.தாணு, படத்தை சென்சாருக்கு அனுப்பவில்லையாம். ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு தமிழில் மட்டும் வாங்கிவிட்டனர். ஆனால், ஹிந்தி டப்பிங் வெர்ஷனுக்கு சென்சார் கிடைக்கவில்லையாம். ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், ஹிந்தி வெர்ஷன் சென்சார் ஆகும்வரை காத்திருக்கின்றனர். இதனால், தாணு மீது கடுப்பில் இருக்கிறார் தனுஷ் என்கிறார்கள்.