1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (07:46 IST)

தனுஷ், செளந்தர்யா என்னை ஏமாற்றிவிட்டனர். கஜோல்

தனுஷ், அமலாபால், கஜோல், நடிப்பில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நேற்றைய பாடல் வெளியீட்டு விழாவில் தனுஷூம் செளந்தர்யாவும் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார்.



 


எனக்கு தமிழ் பேச கஷ்டமாக இருக்கும் என்பதால் இந்த படத்தில் நடிப்பது குறித்து யோசித்தேன். ஆனால் என்னை மும்பையில் வந்து சந்தித்த தனுஷ் மற்றும் செளந்தர்யா, 'இந்த படத்தின் எனக்கு தமிழ் வசனம் அதிகம் இருக்காது என்றும் அதனால் தைரியமாக நடிக்கலாம் என்றும் கூறினர்.

ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலேயே இரண்டே இரண்டு காட்சிகளுக்கு இரண்டு பக்க வசனங்களை கொடுத்தனர். அவ்வளவும் தமிழ்தான். அப்போதுதான் இருவரும் என்னை ஏமாற்றிவிட்டதை புரிந்து கொண்டேன். இருப்பினும் இருவருமே எனக்கு வசனங்களை எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்து எனது வேலையை எளிமையாக்கினர். இவ்வாறு கஜோல் கூறியுள்ளார்.