செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:23 IST)

டெல்லி க்ரைம் இணைய தொடருக்கு எமி விருது! – உலகளாவிய விருது வென்ற முதல் இந்திய தொடர்!

டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையமாக கொண்டு வெளியான டெல்லி க்ரைம் என்ற இணைய தொடருக்கு சர்வதேச எமி விருது வழங்கப்பட்டுள்ளது.

2012ல் இந்தியாவையே உலுக்கிய டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையப்படுத்தி டெல்லி க்ரைம் என்ற இணைய தொடர் கடந்த ஆண்டு வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடரை ரிச்சி மேத்தா இயக்கியிருந்தார். டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண் காவல் அதிகாரி தலைமையிலான குழு நடத்திய விசாரணையை விவரித்து எடுக்கப்பட்ட இந்த தொடர் பரவலான பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் சர்வதேச எமி விருது வழங்கும் விழாவில் சிறந்த இணைய தொடருக்கான விருது டெல்லி க்ரைம் தொடருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அனைத்து பெண்களுக்கும் சமர்பிப்பதாக இயக்குனர் ரிச்சி மேத்தா தெரிவித்துள்ளார். உலகளாவிய எமி விருதில் முதன்முறையாக இந்திய இணையத்தொடர் விருது பெருவது குறிப்பிடத்தக்கது.