செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (08:44 IST)

தமிழகத்தில் மட்டும் ரூ.75 கோடி: தர்பாரின் அசத்தல் வசூல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாகவும் நீண்ட பொங்கல் விடுமுறை காரணமாகவும் கடந்த 10 நாட்களாக வசூலை வாரி குவித்தது
 
மூன்றே நாட்களில் இந்த படம் 150 கோடியும் ஒரு வாரத்தில் ரூபாய் 220 கோடியும் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக லைகா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ’தர்பார்’ படத்தின் தமிழக உரிமையை ரூபாய் 63 கோடிக்கு விற்பனையான நிலையில் நேற்று வரை இந்த படம் ரூபாய் 75 கோடி வசூல் செய்துள்ளதாகவும் சென்னையில் 10 கோடிக்கும் மேல் தொடர்ந்து வசூல் செய்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் வரும் வாரங்களிலும் பெரிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் ’தர்பார்’ திரைப்படம் இன்னும் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது என்பதால் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடி வசூலை ’தர்பார்’ படம் நெருங்கும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறி வருகின்றன
 
இந்த படத்திற்கு ஒருசிலர் நெகடிவ் விமர்சனங்கள் கொடுத்து படத்தை ஓட விடாமல் சதி செய்த போதிலும் அந்த சதியை முறியடித்து ’தர்பார்’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது