செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (08:27 IST)

நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்: எவ்வளவு தெரியுமா?

பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2016ஆம் ஆண்டு விஷால் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பதும் இதனை அடுத்து ஜிஎஸ்டி செலுத்தியதன் காரணமாக அவரை விசாரணை செய்ய 10 முறை சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஷால் 10 முறையும் ஆஜராகாததால், இதையடுத்து அவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது 10 முறை ஆஜராகாத விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது