கமல்ஹாசன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
மகாபாரதம் தொடர்பான கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததாக இந்து மத அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும், கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தியது.
இதுகுறித்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் கும்பகோணம் நீதிமன்றங்களில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்ட. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர் வருகிற மே 5ம் தேதி வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.