செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (17:37 IST)

பிரபல நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் ...ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு வரும்  ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், சினிமா படப்பிடிப்புகளும்  கொரொனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிரபல டிவி சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி, உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் இவர் கொரொனா டெஸ்ட் செய்து கொண்டதில் இவருக்கு பாசிட்டி என்று சோதனை முடிவு வந்துள்ளது.

மேலும், இது குறித்து நவ்யா சாமி கூறியுள்ளதவது; எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் நடிகைகள் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.  இதை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

நவ்யாசாமிக்கு கொரொனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.