வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (15:01 IST)

பேமிலி மேன் மூன்றாம் பாகம் எப்போது தொடக்கம்?... நடிகர் மனோஜ் பாஜ்பாய் தகவல்!

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

இந்நிலையில் இதுவரை மூன்றாம் பாகம் தொடங்கப்படவில்லை. இதுபற்றி பேசியுள்ள அந்த தொடரில் நடித்து வரும் மனோஜ் பாஜ்பாய் “மூன்றாம் பாகத்தை நாங்கள் எப்போதோ தொடங்கி இருப்போம். ஆனால் ராஜ் மற்றும் டி கேவின் வேறு சில படங்களால் தாமதம் ஆனது. மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு தொடங்கும்” என சொல்லப்படுகிறது.