வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஜூன் 2021 (18:13 IST)

சிம்புவின் ‘’மாநாடு ’’பட பாடல் டீசர் ரிலீஸ்...

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடலின் டீசரை இன்று யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனை அடுத்து சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு ஆகியவை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஜூன் 21 என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் #Meherezylaa என்ற பாடலின் டீசரை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.