திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (12:04 IST)

காமெடி நடிகர் சதீஷால் அப்செட்டான சிம்பன்ஸி குரங்கு! `கொரில்லா’ ஷூட்டிங் சுவாரஸ்யம்

கொரில்லா படத்தின் ஷூட்டிங்கின்போது காமெடி நடிகர் சதீஷைப் பார்த்தாலே படத்தில் நடித்திருக்கும் சிம்பன்ஸி குரங்கு அப்செட்டாகிவிடுமாம்.

 
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் கொரில்லா. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். டான் சாண்டி இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த நகைச்சுவைப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்றும் நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை. 
 
ஷூட்டிங் ஸ்பாட்டின் சிம்பன்ஸி குரங்கு நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே என அனைவரிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டதாம். ஆனால், காமெடி நடிகர் சதீஷைப் பார்த்தால் மட்டும் குரங்கு செம அப்செட்டாகிவிடுமாம். சதீஷ் மற்றும் சிம்பன்ஸி குரங்கு ஒரே காட்சியில் நடிக்க வேண்டி இருந்தால், அந்த காட்சியை எடுப்பதற்கும் படக்குழுவினர் படாதபாடுபடுவார்களாம். சிம்பன்ஸிக்கும் சதீஷூக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என்று முணுமுணுக்கிறார்கள் படக்குழுவினர்.