1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 31 ஜூலை 2017 (17:28 IST)

பிக்பாஸ் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் கமலுக்கும் சண்டையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கும் கமலுக்கும், நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் முதலில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் பின் கொஞ்சமாக கொஞ்சமாக அனைவரையும் கவர்ந்துவிட்டது. தற்போது பிக்பாஸ் பற்றி பேசாத நபர்களே இல்லை என்று சொல்லலாம். ஓவியா புரட்சி படை என்ற குழு ஒன்று உருவாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அதிகரிக்க ஜூலி மற்றும் ஓவியா இரண்டு பேரும் முக்கிய காரணமாய் அமைந்துள்ளனர்.
 
இந்நிலையில் நிகழ்ச்சியை தொகுந்து வழங்கும் கமலுக்கும், நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமலை சில ஸ்பான்ஸர் பெயர்கள் கூற சொன்னதாகவும், அதற்கு கமல் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது கமலுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.