திங்கள், 18 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

சிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் சிட்ரஸ் பழங்கள்

சிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் சிட்ரஸ் பழங்கள்

சிறுநீரகக் கற்கள் என்பது பல்வேறு மினரல்கள் கலந்து கரைய முடியாத சிறு சிறு கல்லாய் மாறிவிடும், இவை சிறுநீரில் வெளியேற முடியாமல் அடைத்துத் தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.


 
 
பெரும்பாலும் கால்சியம் ஆக்ஸலெட் என்ற தாதுதான் சிறுநீரக கற்களாய் உடலில் தோன்றும். சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும். சிறுநீரகக் கற்கள் உருவாகும் ஆபத்தில் இருப்பவர்கள் கீரைகள், ஆசஸலேட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் அதிகமாக நீர் அருந்துதல் மிக முக்கியம்.
 
சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். மேலும் அவ்வாறு உருவாகிய கற்களைக் கரையச் செய்யும் ஆற்றல் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

சிட்ரஸ் பழங்களிலுள்ள ஹைட்ராக்ஸி சிட்ரேட் என்ற பொருள் சிறு நீரகக் கற்கள் உருவாகக் காரணமான கால்சியம் ஆக்ஸலேட்டைக் கரையச் செய்யும் என அமெரிக்காவிலுள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.