1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2015 (10:15 IST)

ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு தேர்தல் - மும்முனை போட்டி

ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு தேர்தல்

தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு நடிகர் சங்கத்தைப் போலவே தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.


 

 
பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட சிலர் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. அது பற்றி பி.சி.ஸ்ரீராம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
"தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு கடந்த 8 வருடங்களாக தேர்தல் நடைபெறவில்லை.
 
சில முறைகேடு புகார்களும் வந்தன. எனவே, தேர்தல் நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. 
 
அதன்படி, அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதில், 3 அணிகள் போட்டியிடுகின்றன. 
 
என் தலைமையில் ஒரு அணியும், கன்னியப்பன் தலைமையில் இன்னொரு அணியும், ஜி.சிவா தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. ஓட்டுப்போட தகுதியுள்ள உறுப்பினர்கள் 912 பேர்.  இவ்வாறு அவர் கூறினார்.