1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : புதன், 11 மே 2016 (10:44 IST)

சினி பாப்கார்ன் - தாண்டவமாடும் காப்பிகள்

சினி பாப்கார்ன் - தாண்டவமாடும் காப்பிகள்

சோனத்தின் பெண்ணிய பாசம்
 
ஹிர்த்திக் ரோஷன், கங்கனா ரனவத் நடுவே என்ன சண்டை போய்க்கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. என்னுடைய அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டார் அஸ்திரத்துடன்தான் கங்கனா ரனவத் போர் முரசு கொட்டினார். அதன் பிறகு இருவரது வக்கீல்களும் விளக்கமளித்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது சண்டையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். 
 
இவர்களின் சண்டை குறித்து சோனம் கபூரும் கருத்து கூறியுள்ளார். கங்கனா அழகான, கூலான பெண். ஹிர்த்திக் ரோஷன் என்னுடன் வளர்ந்தவர், ஜென்டில்மேன். அன்புள்ளம் கொண்டவர். அவர் தவறாக எதுவும் செய்ய மாட்டார். ஆனாலும், இந்த விஷயத்தில் ஒரு பெண்ணாக என்னுடைய ஆதரவு கங்கனாவுக்குதான் என கூறியுள்ளார்.
 
கங்கனா ஹிர்த்திக் இருவரையும் முன்னிறுத்தி இந்திப்பட உலகம் பிளவுபடுமுன் இருவரும் சண்டையை நிறுத்திக் கொண்டால் நல்லது.


 
 
பலே பாலையா
 
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சாதாரண படத்திலேயே ரயிலை ஒரு விரலால் நிறுத்துவார். தற்போது அவர் நடித்து வருவது அவரது 100 -வது படம். அதுவும் சரித்திர படம். சண்டைக் காட்சியில் பாலையா என்ன செய்வார் என்பதை அறிய ஆந்திராவும், தெலுங்கானாவும் சேர்ந்தே காத்திருக்கிறது. 
 
பாலகிருஷ்ணாவின் 100 -வது படம் கடந்த ஏப்ரலில் பிரமாண்டமாக தொடங்கியது. அமராவதியில் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமராவதியை ஆண்ட சாதகர்னி என்ற மன்னனின் கதையைத்தான் படமாக எடுக்கிறார்கள். சாதகர்னி மன்னனாக பாலகிருஷ்ணா நடிக்கிறார். 
 
இதன் படப்பிடிப்பு மொராக்கோவில் தொடங்கியுள்ளது. முதலில் பாலகிருஷ்ணாவின் சண்டைக் காட்சியைத்தான் எடுக்கிறார்கள். இந்த ஒருவரி செய்திக்கே பாலையாவின் ரசிகர்கள் புல்லரித்துப் போயுள்ளனர். படம் வெளியானால் பத்து பாகுபலிக்கு சமமான ஸ்டார் பவருடன் இருக்கும் என்கிறார்கள் பாலையாவின் ரசிகர்கள்.
 
பார்க்கத்தானே போறோம்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க........

தாண்டவமாடும் காப்பிகள்
 
ஹிர்த்திக் ரோஷன் காபில் என்ற படத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கும் இந்தப் படத்தில் ஹிர்த்திக் நடிப்பது கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில்.


 
 
தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த தாண்டவம் படத்திலும் நாயகன் கண் தெரியாதவர். பழிவாங்கும் கதையான அதனையே காபில் என்ற பெயரில் இந்தியில் எடுப்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. தாண்டவம் படத்தின் கதையே, உதவி இயக்குனரின் கதை என்று பஞ்சாயத்தாகி கடைசியில் இயக்குனர்கள் சங்கத்தில் பேசி பிரச்சனை சரி செய்யப்பட்டது. அந்த காப்பி கதையைதான் ரைட்ஸ் வாங்கி பண்ணுகிறார்கள் என்பது வதந்தியாளர்கள் சொல்லும் முதல் தகவல் அறிக்கை.
 
அடுத்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி படம் வெளியாவதற்குள் காபில் தழுவலா சொந்த சரக்கா என்பது தெரிந்துவிடும்.