செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2016 (17:48 IST)

சின்ட்ரெல்லாவாகும் அமலா பால்

குழந்தைகளுக்குப் பிடித்த கதாபாத்திரம் சின்ட்ரெல்லா. சின்ட்ரெல்லாவை மையப்படுத்தி நிறைய கதைகள், திரைப்படங்கள் வந்துள்ளன. டிஸ்னியின் இந்த கதாபாத்திரப் பெயரில் அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் அமலா பால் நடிக்கிறார். விஷ்ணு விஷால் போலீசாக நடிக்கும் இந்தப் படத்தில் அமலா பால் டீச்சராக வருகிறார். இதில் அவரது கதாபாத்திரப் பெயர் சின்ட்ரெல்லா என்றும், அதையே படத்துக்கு வைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.