1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:43 IST)

சின்மயி குடும்பத்தினரிடம் நடந்த நூதன பணமோசடி! சமூகவலைதளத்தில் பதிவிட்டு எச்சரிக்கை!

தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்மயி. அந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் தற்போது பதிவிட்டுள்ள ஒரு எச்சரிக்கை பதிவு வைரல் ஆகி வருகிறது. அதில் ‘என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து TNEB போலி மெஸேஜ் மூலமாக மொத்த பணமும் எடுக்கப்பட்டுள்ளது.

ஓடிபி எண் கூட பகிராமல் எப்படி இவர்கள் இந்த நூதன மோசடியை செய்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.