1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (13:20 IST)

சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பச்சைக் கொடி

புதிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் அதேநாள் அவற்றை டிவிடிகளாக விநியோகிக்கும் சினிமா டூ ஹோம் திட்டத்தை சேரன் இந்தப் பொங்கலுக்கு தொடங்குவதாக அறிவித்திருந்தார். இந்த புதிய திட்டத்தின்படி சேரனின் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை பட டிவிடியை 50 ரூபாய்க்கு வீடுகள்தோறும் விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
 
ஆனால், திடீரென்று இந்தத் திட்டத்தை சேரன் நிறுத்தினார். தனது படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் முன்வந்திருப்பதால் சினிமா டூ ஹோம் திட்டத்தை தள்ளி வைத்ததாக குறிப்பிட்டார். ஆனால், அவரது படம் திரையரங்குக்கு வருவதாக இல்லை.
 
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவை நாடினார் சேரன். அவரது திட்டத்துக்கு சங்கத்தின் புதிய தலைவர் தாணு முழு ஆதரவு அளித்ததோடு, நடிகர், நடிகைகளை அழைத்து பிரமாண்டமாக சினிமா டூ ஹோமின் அறிமுகவிழாவை நடத்துங்கள் என்று அறிவுரையும் கூறியுள்ளார். 
 
அவரது யோசனையை ஏற்று, அடுத்த மாதம் பிரமாண்டமான அறிமுகவிழா நடத்தி தனது ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டிவிடியில் வெளியிடுகிறார் சேரன்.