வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (14:54 IST)

சொன்ன தேதியில் வெளியாகுமா செக்கச் சிவந்த வானம்? வெளியானது இரண்டாவது டிரெய்லர்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, ஜோதிகா மறறும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டிரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.

இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் ஒன்று. இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் செபடம்பர் 27-ந்தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று விலங்குகள் நல வாரியம் இப்படத்திற்கு தடையில்லாச் சான்று தர மறுத்துள்ளதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தில் நாய் சம்பந்தமான காட்சிகள் ஆட்சேபிக்கும் விதமாக உள்ளதாகவும் அதனால் சான்றிதழ் தர மறுத்துள்ளதாகவும் தெரிகிறது. இது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தற்போது இப்படத்தின் இரண்டாவது டிரெயிலர் வெளியாகியுள்ளது. ஆனால் டிரெயிலரின் முடிவில் படம் செப்டம்பர் 27-ந்தேதி வெளியாகும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.