வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (07:35 IST)

சீரியல் நடிகை சைத்ராவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார். இந்த சீரியல் முடிந்த பின்னர் தற்போது சன் டிவியில் கயல் எனும் நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இடையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். இந்நிலையில் அவர் தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தைப் பற்றி சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி “ஷூட்டிங் முடிந்து நேற்று சென்னை, போரூர் அருகே காரில் வந்துகொண்டிருந்தேன். அப்போது வாகன சோதனை நடந்ததால் வாகனங்கள் பொறுமையாக நகர்ந்தன. அப்போது என் காரில் சிமெண்ட் கட்டி வந்து விழுந்தது. இதனால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் காருக்கு மிகப்பெரிய செலவை வைத்துவிட்டது. அந்த இடத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் என்ன ஆகி இருக்கும் என நினைக்கக் கூட முடியவில்லை.  மக்கள் உஷாராக இருக்கவும்” எனக் கூறியுள்ளார்.