புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:05 IST)

’யூ - டியூப்’ சினிமா விமர்சகர்களுக்கு பிரபல இயக்குநர் எச்சரிக்கை...

சென்னையில் கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு  யூடியூப் சினிமா  விமர்சகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கோணலா இருந்தாலும் என்னோடது என்ற படத்தை டிகே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கிரிஷ், மேகாஸ்ரீ, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் ஆர்வி. உதயகுமார். பேரரசு ஜாக்குவார் தங்கம், உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
 
அப்போது இயக்குநர் பேரரசு பேசியதாவது:
 
'தயாரிப்பாளர்களின் சூழலை புரிந்து கொண்டு படம் எடுக்க வேண்டும். இப்படத்தின் தலைப்பை கண்டு முதலில் தயங்கினேன். கதை வித்தியாசமாக இருக்கிறது என்றுதான் இங்கு வந்தேன். தற்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என பலருக்கு பயந்த காலம் போய் இப்போது யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.பல கோடிகள் போட்டு பணம் எடுப்பவர்களை ஒருமையில் விமர்சிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் விளைவுகள் வேறுமாதிரி ஆகி விடும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.