செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (18:25 IST)

’’போதைப்பொருளுடன் பிரபல நடிகை கைது.’’.சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி

பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சொதனையில் போதைப்பொருளுடன் பிரபல நடிகை சுவேதா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. தற்போது இவரது காதலின் ரியா போதைப்பொருள் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.

இதையடுத்து சாரா அலிகான், தீபிகா படுகோனே ஆகியொருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பாலின் காதலி கெபரில்லாவின் சகோதரன் அஜிசியாலோஸிடம் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அர்ஜூன் ராம்பாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர், வரும் நவம்பர் 13 அம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைத்தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதேபோல் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி , ராகினி திரிவேதி,ஆகியோர் போதைபொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இன்று தெலுங்கு நடிகை சுவேதா குமாரி(27) போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகை சுவேதா குமாரி தங்கியிருந்த அறையைபோலீஸார் சோதனை நடத்தினர். இதில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் இவருக்கு மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புள்ளதாகவும் தெரிகிறது.

பிரபல நடிகைக்கு போதைபொருள் கும்பலுடன் தொடர்புள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.