1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (22:53 IST)

இது நிஜமாவே நீங்க தானா... படு ஒல்லியாகி ஆளே மாறிப்போன கேத்ரின் தெரசா!

'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறார்.
 
மெட்ராஸ் படத்திற்கு பிறகு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான 'கலகலப்பு 2' படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.ஆதலால் , தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் தாராளம் காட்டி நடிப்பார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலோடு ஒட்டிய skinny gown அணிந்துகொண்டு செம ஸ்டைலா போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க செய்துவிட்டார். இந்த போட்டோவை பார்த்து நம்பமுடியாமல் ஷாக்கான நெட்டிசன்ஸ், அட மெட்ராஸ் படத்துல பார்த்த கேத்ரின் தெரசாவா இது...! இப்புடி கிக்குனு மாறிட்டாங்களேப்பா என வியப்புடன் ரசித்து வருகின்றனர்.