சினிமா தியேட்டர்கள் மீது வழக்கு பதிவு!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 23 ஜனவரி 2017 (17:31 IST)
ஐகோர்ட்டு உத்தரவின் படி சென்னையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ் சினிமா தியேட்டர்களில் கட்டணம் வசூலிப்பதை கண்காணிப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 
 
வணிக வரித்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த கண்காணிப்புக் குழு கொண்டுள்ளது.
 
இந்த கண்காணிப்புக் குழுவினர் தியேட்டர்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கட்டணம் வசூலிப்பதை நேரடியாக சென்று பார்வையிடுவார்கள். 
 
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை நகரில் உள்ள சினிமா தியேட்டர்களில் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் வரை நடத்த அரசு அனுமதி வழங்கி இருந்தது. 
 
சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நேரடியாகச் சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். இச்சோதனையின் போது அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி 5 தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. 
 
அந்த தியேட்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தியேட்டரின் லைசென்சை ரத்துசெய்ய சிபாரிசு செய்யப்படும் என்று கண்காணிப்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :