1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: புதன், 3 மே 2017 (15:19 IST)

“தன்னந்தனியாக ரசிகர்களைச் சிரிக்கவைக்க முடியாது” – சூரி

“தன்னந்தனியாக காமெடி செய்து ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் சூரி.
 
 
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி நடிப்பில் எழில் இயக்கியுள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் பேசிய சூரி, “எழில் சாரின் ‘மனம் கொத்திப் பறவை’ தொடங்கி இந்தப் படம் வரை நான் நடித்துள்ளேன். அவர் எழுதும் கதைக்கும் எப்படியோ நான் வந்துவிடுகிறேன். 
 
எழில் சாரைப் பொறுத்தவரை, காமெடிக்கு முக்கியத்துவம் தருவார். அதனால் தான், பல காமெடியன்களுக்கு அவர் படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. எவ்வளவு பெரிய காமெடி நடிகராக இருந்தாலும், உடன் சில காமெடி நடிகர்களைச் சேர்த்துக் கொண்டு  நடித்தால் தான் ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியும். தன்னந்தனியாக யாரும் ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியாது. 
 
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில், என்னை புஷ்பா புருஷனாக ஆக்கினார். அதுவரை ‘பரோட்டா சூரி’யாக  இருந்த நான், இப்போது புஷ்பா புருஷனாக மாறிவிட்டேன். எங்கு சென்றாலும் என்னை அப்படித்தான் அழைக்கிறார்கள். அவ்வளவு ஏங்க… என் மனைவி முன்னாலேயே அப்படித்தான் அழைக்கிறார்கள்” என்றார்.