வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (23:38 IST)

அட்ரா பார்ப்போம்! எங்கே அடி! சக்தியிடம் வரிந்து கட்டிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் தைரியம் மிகப்பெரிய அளவில் இருப்பதாக நெட்டிசன்களும் டுவிட்டர் பயனாளிகளிம் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர்.



 

 
பரணியை அனைவரும் ஒன்று சேர்ந்து டார்ச்சர் செய்தபோது பைத்தியம் பிடிக்காத குறையாக விட்டால் போதும் என்று தப்பித்து ஓடினார். அதேபோல் ஓவியாவையும் விரட்டி விடலாம் என தப்புக்கணக்கு போட்டுவிட்டர்கள் போலும்
 
எல்லோரும் ஒரே அணியில் இருந்தாலும், 'தலைவி' ஓவியா தனி ஆளாக இருந்து அனைவரின் எதிர்ப்பையும் சமாளித்து வருகிறார். எனக்கு யாரும் சப்போர்ட் பண்ண வேண்டாம், எனக்கு நானே பெரிய சப்போர்ட் என்று சினேகனிடம் ஓப்பனாக கூறிய ஓவியா, ஒரு கட்டத்தில் சக்தி ஓவியாவை அடிக்க வர, தைரியமுடன் அவரை எதிர்கொண்டு எங்கே அடி பார்க்கலாம் என்று துணிச்சலுடன் ஓவியா வந்ததை அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்த ஒன்றே போதும் ஓவியா, இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு! வாழ்த்துக்கள் ஓவியா!!!