1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (08:00 IST)

ஒரு ரூபாய் கூட சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார்.. பிரபல தயாரிப்பாளர் மீது பாலாஜி முருகதாஸ் புகார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தான் நடித்த படத்திற்கு தயாரிப்பாளர் ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லை என்று தனது சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜேஎஸ்கே சதீஷ் என்பவர் தயாரித்து நடித்த திரைப்படம் ஃபயர். இந்த படத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடித்திருந்தார் என்பதும் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சாக்சி அகர்வால் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து சமீபத்தில் டீசர் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் இந்த படம் குறித்து பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் ஃபயர் படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட இன்னும் சம்பளமாக தயாரிப்பாளர் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதையெல்லாம் பார்க்கும் போது சினிமாவை வேண்டாம் என்று விலகி விடலாம் போல் இருக்கிறது என்றும் அவர் விரக்தியுடன் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மனம் தளர வேண்டாம் என்றும், கண்டிப்பாக உங்களுக்கான பணம் கிடைத்து விடும் என்றும், நீங்கள் திரையுலகில் பெரும் சாதனை செய்வீர்கள் என்றும், எனவே தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Edited by Siva