ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (12:57 IST)

ஸ்வான்கி கார் வாங்கிய தாடி பாலாஜி... பிரம்மித்து புலம்பும் திரைத்துறை பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். 
 
இவர்களுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறாள். தொடர்ந்து பாலாஜி தன் மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் நடுவராக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
 
மேலும், பிக்பாஸ் நிகழ்சியில் போட்டியாளராக இருவரும் கலந்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் மூலமாவது இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர்கள் கடைசி வரை சேர்ந்து வாழாமல் தனித்தனியாக இருந்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் பாலாஜி உயர்ரக சொகுசு கார் வகைகளில் ஒன்றான ஸ்வான்கி கார் வங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெரிய தொழிலதிபர்கள் மட்டுமே வைத்திருக்கும் அத்தகைய காரை சாதாரண நடிகர் தாடி பாலாஜி வங்கியிருப்பதை தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் பிரம்மிப்புடன் பார்த்துள்ளனர்.