1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (09:23 IST)

உடல் எடை குறைத்து ஒல்லியான லாஸ்லியா... இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரிக்கு ஜோடியாக புதுப்படத்தில் நடித்துள்ளார். இதில் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். அத்துடன், அறிமுக நாயகன் ஒருவருக்கு ஜோடியாக மற்றொரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் படவாய்ப்புகள் இன்றி சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது பீச்சில் நின்றுக்கொண்டு செம கூல் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதில் லாஸ்லியா பார்ப்பதற்கு ஸ்லிம்மாக தெரிகிறார். ஒல்லியான தேகத்தில் கவர்ச்சியை காட்டி இழுத்துள்ள இந்த புகைப்படம் லாஸ்லியா ரசிகர்ளை வெகுவாக ஈர்த்துள்ளது.