செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (12:22 IST)

என் அம்மா நிஷா அக்காவிடம் இருந்து கத்துக்கணும்... கதறி அழுத அனிதா சம்பத்!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி முதல் துவங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவர்ச்சி சர்ச்சை , சண்டை என ஒவ்வொன்றுக்கும் தேடிப்பிடிச்சு ஆளை பொறுக்கிப்போட்டுள்ளனர் விஜய் டிவி. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு கொடுத்துள்ள ஸ்க்ரிப்ட் படி நன்றாக performance செய்து வருகின்றனர்.

அந்தவகையில் முதல் நாள் முழுக்க ஷிவானி பக்கம் கேமராவை திருப்பி வைத்த விஜய் டிவி தற்ப்போது அனிதா சம்பத் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. அனிதாவிற்கு ஆர்மிஸ் உருவாகியுள்ளதால். அவரை அதிகப்படியான பிரேம்களில் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது நிஷாவிற்கு ஹார்ட் முத்திரை குத்தி, தன்னுடைய அம்மாவை பார்ப்பது போலவே உள்ளதாக கூறினார். உடல் நிறத்தின் பாகுபாட்டை நிஷா காமெடியாக எடுத்துக்கொள்வது போலவே அவரது தாய் இருக்கவேண்டும் என கண்கலங்கி அழுத்துவிட்டார் அனிதா. இதோ அந்த வீடியோ...