புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (16:25 IST)

சேரனை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாமல் ஜாலியாக விளையாடும் யங்ஸ்டர்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்களே இருப்பதால் தற்போது நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. 


 
வீட்டிலிருக்கும் 7 போட்டியாளர்களுள் யாரேனும் ஒருவர் நேரடியாக பைனலுக்கு அனுப்பப்படுவர். அதற்காக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு கடினமான டாஸ்க்களை கொடுத்து வருகிறார் பிக்பாஸ். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில், போட்டியாளர்களின் புகைப்படத்துடன் கூடிய வின்னர் என்ற பஸ்ஸில் கேம் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனை சரியாக அடுக்க மற்றவர்கள் அதனை குறுக்கிட்டு கலைக்க கலைக்க மிகச்சரியாக அடுக்க வேண்டும் பின்னர் கடைசியில் யார் சரியாக டாஸ்களை செய்தார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் சேரனை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் ஜாலியாக ஒருவரை ஒருவர் அடித்து கேம் விளையாடுகின்றனர். ஆனால் சேரனின் பஸ்ஸிலை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை . இதனை கண்ட நெட்டிசன்ஸ் "டேய் சேரனையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க டா" என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.