புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:21 IST)

சேரன் நடிக்கிறாரா..? தர்ஷன் மீது கடுப்பான சேரன் ஆர்மிஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி  ஓரளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருந்து வந்தாலும்  நெட்டிசன்ஸ் பலரும் சேரன் வெற்றி பெறவேண்டும் என்று கூறி வருகின்றனர். 


 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள  இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களின் கேரக்டர் என்ன என்பதை கூறி அவரவர் முன்பு வைக்கப்பட்டுள்ள Test Tube ல் கலர் கலர் பவுடரை கொட்டி கூறுகிறார் தர்ஷன். அப்போது முதலாவதாக " சுய சிந்தனையும் தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர் கவின் என்று கூறி அவரது Test Tube ல் புளு கலர் பவுரை கொட்டுகிறார். பின்னர் மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் சேரன் மற்றும் கவின் என்று கூறுகிறார். 
 
அதற்கு சேரன் இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாமா குருநாதா என கேட்க அதற்கு தர்ஷன் சிரித்து  நக்கலடிக்கிறார். இன்றைக்கு ஒளிபரப்படவுள்ள நிகழ்ச்சியில் தர்ஷன் இதற்கான காரணத்தை சொல்வார் என எதிர்பார்க்கலாம். தர்ஷன் இவ்வாறு செய்ததால் சேரனின் ரசிகர்கள் தர்ஷன் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.