1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:54 IST)

பூமி படம் குறித்த புதிய அப்டேட்: ஜெயம் ரவி ரசிகர்கள் குஷி!

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படமான பூமி திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நாளை இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவான ’கடைக்கண்ணால்’ என்ற பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
 
ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரோஹித் ராய், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் டட்லி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.