வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (12:08 IST)

கமல்ஹாசன் பிறந்த நாள்: பாரதிராஜா, வைரமுத்து வாழ்த்து!

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பாரதிராஜா வைரமுத்து உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கமல்ஹாசனுக்கு தங்கள் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் டுவீட்டில் கூறியிருப்பதாவது
 
 
பாரதிராஜா:
 
என் முதல் படைப்பின் நாயகன்,
இலக்கியவாதி,
பெரும் சிந்தனையாளன்,
உலக நாயகன்..
என் கமலுக்கு இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.
 
வைரமுத்து: 
 
பிறந்தநாள் என்பது
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.
 
இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.
 
தொலைபேசியில் 
அழைத்து வாழ்த்தினேன்.
 
பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!