புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (13:19 IST)

எஸ்பிபி-யின் நிலை கண்டு நொறுங்கிப்போன பாரதிராஜா!

எஸ்பிபிக்காக பல கோடி பேர் பிரார்த்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை என இயக்குனர் பாரதிராஜா வேதனை. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்திருந்தார்.  
 
ஆனால் மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இநிந்லையில் அவரை சந்திக்க சென்ற பாரதிராஜா, செய்தியாளர்களிடம் வேதனையுடன் பேசினார். 
 
அவர், சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன். இயற்கைக்கு முன் நாமெல்லாம் ஒன்றும் இல்லை. நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. அதன் முடிவு தான் நம் முடிவு. பலன் கிடைக்கும் என பல கோடி பேர் பிராத்தனை செய்தும் பலன் கிடைக்கவில்லை என பேசினார்.