வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (13:47 IST)

பாகுபலி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பாலிவுட் நடிகர்!

அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தங்கல்'. இப்படம் வசூல் ரீதியாக ரூ.700 கோடியை வசூலித்தது.  இதனை 'பாகுபலி' படம் முறியடித்து ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

 
ஒரு இடைவெளிக்குப் பிறகு 'தங்கல்' படம் சீனாவில் வெளியானது. அங்கேயும் வசூல் சாதனை தொடர்கிறது. அங்கு ரூ.500  கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதனால் 'பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதால தகவல்கள்  வெளியானது.
 
எனவே பாகுபலியுடன் தங்கலை தொடர்ந்து ஒப்பிட்டுப் பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மும்பையில்  சச்சின் படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாகுபலி 2 வசூல் சாதனை பற்றி கேட்கப்பட்ட  கேள்விக்கு பதில் அளித்த ஆமீர்கான் பாகுபலி 2 படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் படம் பற்றி நல்ல விமர்சனங்களை  கேட்கிறேன். பாகுபலி 2, தங்கல் இந்த இரண்டு படத்தையும் சேர்த்து பேசுவது சரியானது இல்லை. இரண்டு படங்களும்  வெவ்வேறு கதைக்களத்தை கொண்டது.
 
இந்திய படங்கள் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் இடம்பெறுவது மகிழ்ச்சி, ராஜமௌலி மற்றும் பாகுபலி படக்குழுவினருக்கும்  தன்னுடைய வாழ்த்துக்களை அமீர்கான் தெரிவித்துள்ளார்.