திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (11:31 IST)

நெட்பிளிக்ஸில் ‘மணி ஹெய்ஸ்ட்’ அடுத்த பாகம்: டைட்டில் இதுதான்!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் கடைசி பாகம் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக தொடரின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
‘மணி ஹெய்ஸ்ட்’தொடரின் முக்கிய கேரக்டர்களில் ஒருவரான ’பெர்லின்’ கதைதான் அடுத்த பாகமாக உருவாக இருப்பதாகவும் இது 2023 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ‘மணி ஹெய்ஸ்ட்’ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது